ஜாம்பியாவில் துணை மின் நிலையம் அமைக்கிறது இந்தியா
டெல்லி:
ஜாம்பியாவில் 330 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப் போகிறது பாரத் ஹெவிஎலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம் (பி.எச்.ஈ.எல்).
இந்த நிறுவனம் வெளிநாட்டில் அமைக்கும் மிகப் பெரிய துணை மின் நிலையம் இது தான். இதற்கானநிதியுதவியை உலக வங்கி செய்யும்.
இதற்கான ஒப்பந்தம் ஜாம்பியாவில் உள்ள லுசாகாவில் கையெழித்தானது. இந்தத் திட்டத்துக்கு ரூ. 68 கோடிசெலவாகும்.
ஏ.பி.பி, பின்லாந்தின் அல்ஸ்தோம், இங்கிலாந்தின் டி அண்ட் டி, ஜெர்மனியின் சீமென்ஸ், சீனாவின் ஜினாங்சிஆகிய சர்வதேச நிறுவனங்கள் இந்த காண்ட்ராக்டைப் பெற போட்டியிட்ட நிலையிலும் இந்த காண்ட்ராக்ட்பி.எச்.ஈ.எல்லுக்கு கிடைத்துள்ளது மிகவும் பெருமைக்குறியதாகும்.
இந்த துணை நிலையம் தவிர ஜாம்பியாவில் ஏற்கனவே உள்ள பதினோறு 330 கிலோவாட் மின் நிலையங்களையும்132 கிலோ வாட் மின் நிலையங்களையும் பி.எச்.ஈ.எல். சீரமைக்கும்.
பி.எச்.ஈ.எல்லுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 6 மிகப் பெரிய சர்வதேச ஆர்டர்கள் கிடைத்துள்ளன. ஓமன்,பங்களாதேஷ், இலங்கை, அசர்பைஜான் ஆகிய நாடுகளில் இருந்து இந்த ஆர்டர்கள் கிடைத்தன. இதன் மூலம் மின்வினியோகத்துறையில் சர்வதேச அளவில் மிக முக்கிய இடத்தை பி.எச்.ஈ.எல். பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications