வீரப்பனால் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 140
சென்னை:
வீரப்பனால் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 140 ஆகும். இத் தகவலை தமிழக முன்னாள் டி.ஜி.பி.வால்டர் தேவாரம் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் தேவாரம் கூறுகையில்,
வீரப்பன் இதுவரை 140 பேரை கொலை செய்துள்ளான். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 100 பேர். நாங்கள்(சிறப்பு அதிரடிப் படை) வீரப்பன் கூட்டாளிகள் 58 பேரை சுட்டுக் கொன்றோம்.
பலரை கைது செய்தோம். இதில் போலீசார் தரப்பிலும் உயிர்ப் பலி ஏற்பட்டிருக்கிறது.
1993ம் ஆண்டில் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படையுடன் நானும் காட்டுக்குச் சென்றேன். அப்போதுவீரப்பனுடன் 150 பேர் இருந்தனர். சிறப்பு அதிரடிப் படையின் கடும் நடவடிக்கை காரணமாக வீரப்பனின்கூட்டாளிகளின் எணணிக்கை 5 ஆகக் குறைந்தது.
இந் நிலையில் தான் கர்நாடக வனத்துறையினரைக் கடத்தி பணம் கேட்டான் வீரப்பன். இப்போது கன்னட நடிகர்ராஜ்குமாரை கடத்திச் சென்றுள்ளான்.
நாங்கள் காட்டில் இருந்தபோது வீரப்பனின் பலத்தை குறைக்க கடுமையாக முயற்சிகளில் இறங்கினோம். முதலில்கர்நாடக மாநிலத்தில் தான் வீரப்பனின் குற்றச் செயல்கள் இருந்தன.
வீரப்பன் தான் கடத்தியவர்களை ஒன்றும் செய்ய மாட்டான். விரைவில் ராஜ்குமாரையும் விடுதலை செய்வான்.இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வீரப்பன சரணடைவதாக அறிவித்தது, நம்மை ஏமாற்றி தனது ஆள் பலத்தைபெருக்கிக் கொள்வதற்காகத் தான்.
அவனை நாம் நம்பியதால் இன்று பலரை தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிட்டான்.
வீரப்பனுக்கு கூட்டாளிகள் சேரும்போதெல்லாம் அவனுடைய பலம் அதிகமாகிவிடும். வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கூடாது. நமது அரசியல் சட்டத்தில் அதற்கு இடமே இல்லை.
அவன் சரணடைந்தாலும் கூட அவன் மீது வழக்குகள் தொடரப்பட வேண்டும். நிச்சயமாக அவனுக்கு தூக்குத்தண்டனை கிடைக்கும். அதன் பின்னர் வேண்டுமானால் அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதிகுறைக்கலாம்.
இதை விட்டுவிட்டு அவனுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் அவனால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் சுப்ரீம்கோர்ட்டில் வழக்குத் தொடருவார்கள். நீதிமன்றத்திலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகவே பதில் வரும். இதுவீரப்பனுக்கும் நன்றாகவே தெரியும்.
அவன் சரணடைவதாகக் கூறுவது நம்மை ஏமாற்றுவதற்காகத் தான். தமிழர்களுக்கு ஆதரவாக அவன் கோரிக்கைவிடுப்பது ஆச்சரியமாக உள்ளது. அவனால் கொல்லப்பட்டவர்களில் 100 பேர் தமிழர்கள்.
ராஜ்குமாரை விடுதலை செய்த பின் வீரப்பனை பிடிக்கும் வேட்டையில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும்.
வீரப்பனுக்கும் தமிழ்நாடு விடுதலைப் படைக்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா என்று எனக்குத் தெரியாது.
இவ்வாறு தேவாரம் கூறினார்.












Click it and Unblock the Notifications