For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புகார் கொடுக்க வந்த பெண்ணை மானபங்கப்படுத்திய இன்ஸ்பெக்டர்

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை:

புகார் செய்ய வந்த பெண்ணை மானபங்கப்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ஒரு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்த பின் அவர் வேறுபோலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிகிறார்

நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அதே ஊரைச் சேர்ந்த லலிதா என்ற பெண்ணைக் காதலித்தார். அவரையே திருமணம்செய்து கொள்ள விரும்பினார்.

இவர்களது திருமணத்துக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து களக்காடு பதிவாளர் அலுவலகத்திலேயே இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

விஷயம் கேள்விப்பட்ட லலிதா குடும்பத்தினர் ஆத்திரமடைந்து, களக்காடு போலீஸில் கணேசன், லலிதாவைக் கடத்தியதாகப் புகார் செய்தனர்.

களக்காடு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் புகாரைப் பெற்றுக்கொண்டு கணேசன் குடும்பத்தினர் அனைவரையும் போலீஸ் நிலையத்துக்குவரச்சொன்னார்.

அதன்பிறகு லலிதா, இன்ஸ்பெக்டர் தன்னை மானபங்கப் படுத்தியதாகப் நாங்குநேரி கோர்ட்டில் மனுக் கொடுத்தார் லலிதா.

98 ம் வருடம், ஆகஸ்ட் 4 ம் தேதி களக்காடு போலீஸ் நிலையத்தில் என்னிடம் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாலியைக் கழற்றுமாறு இன்ஸ்பெக்டர்சுப்ரமணியம் கூறினார். நான் மறுத்துவிட்டேன்.

அதனால் என் அருகில் வந்த இன்ஸ்பெக்டர் என்னை மானமங்கப்படுத்தினார். எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று லலிதா கூறியிருந்தார்.

இந்த வழக்கு, பின்னர் திருநெல்வேலி 2 வது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக இளம் பெண்ணை அழைத்துச் சென்று மானபங்கப் படுத்திய குற்றத்திற்காகஇன்ஸ்பெக்டர் சுப்ரமணியத்துக்கு ஒரு பிரிவில் ஒரு மாத கடுங்காவல் தண்டனையும், ரூ 100 அபராதமும் விதிக்கிறேன்.

மேலும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மற்றொரு பிரிவில் ஒரு மாதம் கடுங்காவல்தண்டனையும் ரூ 100 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கவும், இன்னொரு பிரிவில், இரண்டுமாத சிறைத் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். இவையனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்கும்படியும் நீதிபதி மோகன் தீர்ப்பில்கூறியிருந்தார்.

தண்டனையை அனுபவித்த பின் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் இப்போது மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X