பொதுவேலை நிறுத்தம்.. ஸ்தம்பித்தது அஸ்ஸாம்

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி:

அஸ்ஸாமில் திங்கள்கிழமை நடந்த பொதுவேலை நிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அசாமில் ஆளும் கட்சியான அசாம் கன பரிஷத்திலிருந்து பிரிந்த திரினாமூல் அசாம் கன பரிஷத் கட்சித் தலைவர்கள், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தக் கோரி பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதனால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள், ஆட்டோக்கள் எதுவும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. அரசுஅலுவலகங்கள், வணிகமையங்கள், பள்ளி கல்லூரிகள் மூடியிருந்தன.

திரினாமூல் அசாம் கன பரிஷத் கட்சித் தலைவர் அடல் போரா கூறுகையில், அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரண உதவிசெய்யாதது, மலிந்து கிடக்கும் ஊழல், மாநிலத்தில் தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த தவறி விட்ட அரசு ஆகியவற்றை சுட்டிக் காட்டும் வகையிலும்,ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம் என்றார்.

அடல்போரா ஒரு காலத்தில் முதல்வர் மஹந்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொது வேலைநிறுத்தம்தொடர்பாக இதுவரை 500 க்கும் மேற்பட்ட திரினாமூல் அசாம் கன பரிஷத் தொண்டர்களைக் கைது செய்தனர்.

பொதுவேலை நிறுத்தத்தால் மாநிலத்தில் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. நீண்ட தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ரயில் பிளாட்பாரங்களிலேயேதங்கியுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+