சரிகா .. மிஸ் இன்டியா செளத் ஆப்பிரிக்கா அழகி
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்திய பெண்களுக்கிடையே நடந்த அழகிப் போட்டியில் டர்பனைச் சேர்ந்த சரிகா சுக்தேவ் மிஸ் இன்டியா-சவுத் ஆப்ரிக்கா2000 பட்டம் வென்றார்.
ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள கெசார் காம்பிளக்ஸ்சில் மிஸ் இன்டியா-சவுத் ஆப்ரிக்கா 2000 அழகிப் போட்டி நடந்தது. இதில் சரிகா வெற்றி பெற்றார்.இவர் அழகுக்கலை மாணவி. 15 க்கும் மேற்பட்ட அழகிகளை வென்று பட்டத்தைப் பெற்றார். டர்பனைச் சேர்ந்த நடாஷா பால்டியோஇரண்டாவதாகவும், ஜோகன்னஸ்பெர்க்கைச் சேர்ந்த நடாலியே புரோக்ஸ்டீன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சரிகாவுக்கு தென்ஆப்பிரிக்க மதிப்புப்படி 30, 000 ராண்டு பணமும், வெளிநாட்டு சுற்றுலாவிற்கான இலவசடிக்கெட்டுகளும் கொடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷினி தேவ்கர், சரிகாவுக்கு அழகு ராணி கிரீடத்தை வழங்கினார்.
சரிகா கூறுகையில், இந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. பொதுவாய் பெண்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடினால்அங்கு பிரச்சனை ஆரம்பம் என்று கூறுவார்கள். ஆனால் இங்கு போட்டிக்காக கூடிய அனைத்து பெண்களுமே மிகவும் ஒற்றுமையுடன் காணப்பட்டார்கள்.
அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் என் படிப்பு பாதிக்கப்படாது. அடுத்தடுத்து வரும் அழகிப் போட்டிகளில் கலந்து கொள்வதுடன், படிப்பையும்பார்த்துக் கொள்வேன். தென்ஆப்பிரிக்காவில் இயங்கும் இந்திய கலாச்சார அமைப்புக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவேன் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications