சாவின் பிடியிலிருந்து 31 பெண் சிசுக்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

சாவின் பிடியிலிருந்து 31 பெண் சிசுக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பெண் சிசுக் கொலை தடுப்பு சமூக இயக்க கூட்டமைப்பு என்னும் அமைப்புசெயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி ,ஊத்தங்கரை ,மொரப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை தேர்வு செய்து பெண் சிசுக்கொலைகளை தடுக்கும்நோக்கதில் செயல்பட்டு வருகிறது.

இந்த இயக்கம் மூலம் ஐந்து ஒன்றியங்களில் 140 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராமத்திலுள்ள 1007கர்ப்பிணிகள் பதிவு செய்யப்பட்டனர். இதில் 670 பிரசவங்கள் நடந்துள்ளனது. இதில், 342 ஆண்குழந்தைகளும் ,322 பெண் குழந்தைகளும் பிறந்தன. இவற்றில், 24 ஆண்குழந்தைகளும், 70 பெண் குழந்தைகளும் இறந்துவிட்டன.

பிறந்த 94 பெண் குழந்தைகளின் பெற்றோர், பெண் சிசுவை கொலை செய்யும் நோக்கத்தோடு இருந்தனர். இதைமாற்றி 31 பெண் சிசுக்கள், கொலையில் இருந்து இந்த இயக்கத்தால் காப்பாற்றப்பட்டுள்ளன.

இயக்கத்தின் கணக்கெடுப்பின் படி 42 பெண் சிசு கொலைகள் நடந்திருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. 893குடும்பங்களில் பெண் சிசு கொலைக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இயக்கம் சார்பில்கிராமங்கள் தோறும் அடுத்து ஒரு மாதத்திற்கு பெண் சிசு கொலை தடுப்பு தொடர்பாக கிராம கண்காணிப்பு குழுஅமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட 31 பெண் குழந்தைகளுக்கும் அரசு திட்டங்களில் முன்னுரிமையும், சலுகைகளும் வேண்டும்என்று இந்த பெண் சிசுக் கொலை தடுப்பு சமூக இயக்க கூட்டமைப்பு அரசிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+