காஷ்மீரில் 3 பேர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சிலர், சரமாரியாகச் சுட்டதில் மூன்று பொதுமக்கள் இறந்தனர்.
திங்கள்கிழமை அதிகாளை இந்தச் சம்பவம் நடந்தது.கோட் தாக்ரா கிராமத்தைச் சேர்ந்த அந்த மூன்று கிராமவாசிகளையும், துப்பாக்கிகளுடன்வந்த சிலர், வீட்டுக்குள்ளிருந்து வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்றனர்.
உள்ளூர்ப் பிரச்சினை காரணமாக இது நடந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் முகம்மது ரஷீத், அயூப் ஷா, அப்துல்கரீம் என்று தெரிய வந்துள்ளது.
கொலையாளிகள் அதிகாலை இருளைப் பயன்படுத்தித் தப்பி விட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications