திமுக கூட்டணியில் இணைகிறது மனித உரிமைக் கட்சி
நெல்லை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் இந்திய மனித உரிமைக் கட்சி தி.மு.ககூட்டணியில் சேர்ந்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் இளைய பெருமாள் கூறியுள்ளார்.
நெல்லையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தென் மாவட்டங்களை விட கடலூர் மாவட்டத்தில் ஜாதிக் கலவரம் அதிகமாக நடந்து வருகிறது. ராமதாஸ்,வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியேர்தான் ஜாதியைத் தூண்டி கட்சியை வளர்ப்பதற்கு பாடுபடுவது தான் இதற்குக்காரணம்.
இதுதொடர்பாக அடுத்த மாதம் 30 ம் தேதி சென்னை போலீஸ் டி.ஜி.பி அறை முன்பு உண்ணாவிரதப் போராட்டம்நடத்தப்படும். வரும் 15ம் தேதி இதுகுறித்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து விளக்கம் அளிக்கிறேன்.
இந்திய மனித உரிமைக் கட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.ககூட்டணியோடு சேர்ந்து போட்டியிடுவோம்.
முதல்வர் கருணாநிதி எத்தனை தொகுதிகளை கொடுக்கிறாரோ அத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம்என்றார் இளையபெருமாள்.












Click it and Unblock the Notifications