எலக்டரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ. 150 கோடி
சென்னை:
தமிழகம், பாண்டிச்சேரியில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலில்ஓட்டுப்பதிவு எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடத்த தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது. அதற்காக மத்திய அரசு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழக சட்டசபைக்கும், பாண்டிச்சேரிக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது.இந்த இரண்டு சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. தேர்தல்மார்ச் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலுக்கு எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம் முலம் ஓட்டுப்பதிவு நடத்தமுடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையும் முழுஅளவில் பயன்படுத்தப்பட இருக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா தலைமை தேர்தல் கமிஷனருக்கு எழுதியுள்ளகடிதத்தில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களை வாங்கத் தேவையான 150 கோடிரூபாய் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி தவிர கேரளா,மேற்கு வங்கம் போன்றமாநிலங்களுக்கும் சேர்த்து எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரம் வாங்கப்பட உள்ளது.
மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் எலக்டரானிக் ஓட்டு எந்திரங்கள் தேவைப்படும்.மேற்கு வங்காளத்தில் 61 ஆயிரத்துக்கு 511 வாக்குச் சாவடிகளுக்கும், தமிழகத்தில் 54ஆயிரத்து 847 வாக்குச் சாவடிகளுக்கும், கேரளாவில் 2 ஆயிரத்து 307 வாக்குச்சாவடிளுக்கும், பாண்டிச்சேரியில் 778 ஓட்டுச் சாவடிளுக்கும் எலக்ட்ரானிக்ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
தேர்தல் ஆணையம் ஒன்றரை லட்சம் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களைவாங்க முடிவு செய்துள்ளது.
கடந்த 98-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில்
எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை அடிப்படையில்உபயோகப்படுத்தப்பட்டன. இந்த தேர்தலைத் தொடர்ந்து கோவா சட்டசபைத்தேர்தலிலும் மேலும் பல தேர்தல்களிலும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள்பயன்படுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications