ஆலய நிர்வாகங்களை தனியாரிடம் ஒப்படைக்கலாம்...

Subscribe to Oneindia Tamil

கரூர்:

தமிழ்நாட்டில் இந்துக் கோயில்களின் நிர்வாகங்களை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாகட்சியின் மாநில பொதுச்செயலாளர் இல.கணேசன் கரூரில் நிருபர்களிடம் கூறினார்.

அவர் கூறுகையில், இந்து ஆலய நிர்வாகம் மேம்பட அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும். அறநிலையத்துறையை கலைத்துவிட்டு ஆலயநிர்வாகத்தை தெய்வ நம்பிக்கை உள்ள தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். சுதந்திரமான தனி வாரியம் அமைக்கப்படவேண்டும்.

வாஜ்பாய் பிரதமர் ஆன இரண்டாண்டு காலத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வருகை தந்துள்ளதாக புள்ளிவிபரங்கள்கூறுகின்றன.

காஷ்மீர் இந்தியாவை விட்டுப் பிரிய வேண்டுமா? பிரிய வேண்டாமா என்று மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அன்று கூறிய தேசியமாநாட்டு கட்சி, காஷ்மீர் சுயாட்சி தீர்மானத்துக்கு ஆதரவு கேட்டு மாநில முதல் அமைச்சர்களை தேடி வருகிறது.

இதை மக்களிடம் சென்று ஆதரவு கேட்க முடியாது. காரணம், சுயாட்சி தீர்மானத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்று கூறினார் இல.கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+