ராணுவத் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் பலி

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 10 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.

இமயமலைப் பகுதியில் உள்ள பீர் பஞ்சால் சரகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தத்தாக்குதல் நடந்தது. சமீபகாலத்தில் இந்தியத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டுவைத்து ஏழுஎல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை தீவிரவாதிகள் கொன்ற அதே நாளில் இந்ததாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பீர் பஞ்சால் சரகத்தில், திதாம் காலி என்ற மலைப் பகுதியில் தீவிரவாதிகள்நடமாட்டத்தை ராணுவ வீரர்கள் பார்த்தனர்.இதையடுத்து அவர்கள் மீதுதுப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டனர். தீவிரவாதிகளும் திருப்பிச் சுட்டனர். இந்தமோதலில் தீவிரவாதிகள் தரப்பில் இருந்த 10 பேரும் கொல்லப்பட்டனர். சுமார் நான்குமணி நேரம் இந்த சண்டை நீடித்தது.

இந்தியத் தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை. தீவிரவாதிகளிடமிருந்துகைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விவரம் தெரியவில்லை. மோசமான வானிலைகாரணமாக இதுகுறித்த மேல் விவரமும் உடனடியாகத் தெரியவில்லை என்று ராணுவஅதிகாரி பிந்த்ரா தெரிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+