பாண்டி சட்டசபையை முற்றுகையிட்ட 236 நர்சுகள் கைது

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் தர்ணா போராட்டம் நடத்தி சட்டசபையை முற்றுகையிட முயன்ற 236 நர்சுகளை போலீஸார் கைது செய்தனர்.

பாண்டிச்சேரியில் பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம் சார்பில் நர்சுகள் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், காலியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக நர்சுகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பொது மருத்துவமனை முன்பு இவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். நர்சுகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளநோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தர்ணா போராட்டத்தின் ஐந்தாவது நாளான திங்கள்கிழமை இவர்கள் சட்டசபையை முற்றுகையிட முயன்றபோது போலீஸார்அனைவரையும் கைது செய்தனர்.

பாண்டிச்சேரி மாநில அரசு ஊழியர் சம்மேளன தலைவர் பாலமோகன், 4-ம் நிலை ஊழியர் சங்க தலைவர் சபாபதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+