குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு சுதந்திர தினம்
இஸ்லாமாபாத்:
தடுமாறும் பொருளாதாரம், பக்கத்து நாட்டுடன் ஓயாத தகராறு, வறுமை, கண் விழியைப் பிதுக்கும் கடன் என சுமைகளை தோளில் சுமந்து கொண்டு53-வது சுதந்திர தினத்தில் காலடி வைத்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் தனது 53 வது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடுகிறது. சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் கழிந்தும், அதே சமயத்தில்சுதந்திரம் வாங்கிய இந்தியாவை விட மோசமான நிலையில்தான் பாகிஸ்தான் இன்னும் உள்ளது.
இந்தியாவை எப்போதும் சீண்டிக் கொண்டும், தனது வருவாய்க்க மீறிய வகையில் கடன்களை வாங்கிக் கொண்டும், சக்திக்கு மீறிய வகையில் ஆயுதங்களைக்குவித்துக் கொண்டும், தேவையில்லாத வகையில் அணு ஆயுதத் தயாரிப்பிலும் ஈடுபட்டுக் கொண்டுள்ளது பாகிஸ்தான்.
காஷ்மீரில் அமைதி நிலவ எப்போதுமே அது உதவியதில்லை. இந்த நிலையில், பாக்.ஆதரவு ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத இயக்கம் திடீரென, மூன்று மாதசண்டை நிறுத்தத்தை அறிவித்தது. இதற்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என்று பேசப்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கும் ஹிஸ்புல் முன்வந்தது.இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையும் துவங்கியது.
ஆனால், திடீரென்று, பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்தியா அதற்குஒப்புக்கொள்ளாததால் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றது. இதற்கும் பாகிஸ்தான்தான் காரணம் என்று அமெரிக்கா, இந்தியா ஆகியவைகுற்றம்சாட்டின.
சண்டை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட அடுத்த நாளே ஸ்ரீநகரில் கார் குண்டு வெடித்தது. இதில் 12 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். சண்டை நிறுத்தம் வாபஸ்பெற்ற நாள் முதல் காஷ்மீரில் கிட்டத்தட்ட தினசரி ஒரு குண்டுவெடிப்பு நடக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், எக்கச்சக்க பிரச்சனைகளுக்கிடையே பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் இது உண்மையிலேயேஅவர்களுக்கு மகிழ்ச்சி தரும் நாள்தானா என்பது கேள்விக்குறியே.
ஆகஸ்ட் 6 ம் தேதி பாகிஸ்தானில் அனைத்துகட்சிக் கூட்டம் நடந்தது. ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் கட்சித்தலைவர்கள், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கட்சியின் தலைவர்கள் உள்பட 40 க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதில், பாகிஸ்தானில் மக்கள் அமைதியுடன் வாழவும், ஒற்றுமையுடன் வாழும் வகையிலும் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றுகட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். பிற அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகையில், நாட்டில் ஜனநாயக அரசு தேவை. மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இருந்தால் தான் மக்களால் கேள்வி கேட்க முடியும். நாட்டில் எப்போதுமே ராணுவம் ஆட்சி நடத்த முடியாது என்றுகூறினர்.
பழம்பெரும் அரசியல் தலைவர் நசருல்லா கான் கூறுகையில், யாக்யா கான், முகமது ஜியா உல் ஹக், அயூப் கான் ஆகியோர் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தபோது ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்கள். ஆனால் முஷாரப் ஆட்சியைக் கைப்பற்றியபோது, ராணுவச் சட்டத்தை கொண்டு வரவில்லை. ராணுவச்சட்டம் இனிமேல், பாகிஸ்தானில் வராது என்று நம்புகிறேன். ராணுவச் சட்டம் மிகவும் அபாயகரமானது. அது நாட்டையே அழிவுப்பாதைக்குஇட்டுச் சென்று விடும் என்றார்.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளுடன் அமைதியாகவும்,சமாதானமாகவும் போக விரும்புகிறது. தெற்காசியாவின் முன்னேற்றத்திற்காக இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.இந்தியாவுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார் முஷாரப்.
ராணுவத்தின் பிடியில் இருக்கும் பாகிஸ்தானை, மீண்டும் ஜனநாயகப் பாதைக்குக் கொண்டு செல்ல இந்த சுதந்திர தினத்தை முஷாரப் பயன்படுத்திக்கொள்வாரா என்று உலகமே இப்போது ஆவலுடன் பார்த்துக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications