For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொருளாதார சுதந்திரத்திற்காக போராட ஜனாதிபதி அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

K.R.Narayananவெளிநாடுகளுக்குச் சவால் விடும் வகையில் இந்தியா பொருளாதார நிலை இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்று ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இந்தியா 53-வது சுதந்திர தினத்தை செவ்வாய்க்கிழமை கொண்டாடுகிறது. இதையொட்டி ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் வெளியிட்டுள்ள சுதந்திர தினவாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

இன்று நாம் இந்திய நாட்டின் 53 வது சுதந்திர தின நாளில் காலடி எடுத்து வைத்துள்ளோம். நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாகக்கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சுதந்திர தினம் மில்லினியம் வருடத்தின் முதல் சுதந்திர தினமாகும்.

எல்லைப் பகுதியில் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடும் ராணுவ வீரர்கள், நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகள், தொழிலாளர்கள்,ஆசிரியர்கள், மருத்துவர்கள், என்ஜினியர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், எதிர்கால இந்தியாவை உருவாக்கும் இளைஞர்கள் ஆகியஅனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவை முன்னணிக்குக் கொண்டு வருவதில் இவர்கள் அனைவருக்கும் அதிக பங்கு உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. இந்த சுதந்திர தினம்நம்மிடையே, நாம் இந்தியன் என்ற கர்வத்தையும், தன்னம்பிக்கையும் உருவாக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

காலங்காலமாக பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த நாம் 1947 ல் சுதந்திரம் பெற்றோம். அதற்காக நாம் கொடுத்த உயிர்ப்பலிகளோகணக்கிலடங்காது.

கரடு முரடான பாதைகளையெல்லாம் கடந்து இன்று நாட்டின் 53 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவரும்நாட்டின் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

1947 வரை நாம் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோம். ஆனால் அதற்குப்பின் நம்மை எதிர்நோக்கிய பிரச்சனை பொருளாதார சுதந்திரம்மற்றும் சமுதாய மாற்றம்.

கீழ்த்தட்டு வர்க்க மக்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவது, வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் நிலையில் மாற்றம் ஏற்படுத்துவது,தாழ்த்தப்பட்டோர், பின் தங்கியவர்களை மேம்பாடடைய வைப்பது ஆகியவையே நம்மை தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனை.

இந்திய மக்களின் ஒற்றுமையே நாம் இதுவரைப் பெற்ற வெற்றிகளுக்குக் காரணம். பல ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் கண்ட கனவுபலித்துவிட்டது. அதே போல் நாமும் இன்னும் செழுமையான இந்தியா உருவாகக் கனவு காண வேண்டும். கனவுகள் நிறைவேறும் நாள் வெகுதூரத்தில்இல்லை.

நாட்டின் பொருளாதாரம், தொழில்நுட்பம், சமுதாய மாற்றம் போன்றவைகளில் பிரமிக்கத்தக்க மாற்றங்களும், வளர்ச்சிகளும் ஏற்பட்டிருப்பதுமலைக்க வைக்கிறது. இதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.

நாம் தொழில்துறையில் அதிகமான வளர்ச்சியடைந்துள்ளோம். உலகளவில் முன்னணியில் உள்ள 12 தொழில் நகரங்களில் இந்தியாவும் ஒன்று என்பதுகுறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தில் இந்திய மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்பத்தில் பிற நாடுகள் பொறாமைப்படும் வகையில்இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது என்பது வெளிப்படையான உண்மை.

இந்தியாவின் இத்தனை வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் ஊன்றுகோலாக விளங்கிய ஜவஹர்லால் நேருவுக்கு இந்தப் பொன்னான நாளில் நாம் நன்றி கூறவேண்டும். அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோருக்கும் நமது நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

அணு விஞ்ஞானத்திலும், விண்வெளி அறிவியலிலும் துரிதமான வளர்ச்சியடைந்துள்ளது இந்தியா. தொழில்நுட்பத் துறையில் குறிப்பாய் சாப்ட்வேர் துறையில்இந்தியா விரல் விட்டு எண்ணக் கூடிய முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்வது நம் நாட்டுக்குப் பெருமையளிக்கக் கூடிய விஷயமாகும். இது மிகுந்தமகிழ்ச்சியைத் தருகிறது.

ஆனால் சுதந்திரம் பெற்று 53 வருடங்களாகியும் நாம் வறுமை, அறியாமை, மூடநம்பிக்கை ஆகியவற்றிலிருந்து விடுபடாமல் இருக்கிறோம். இந்தநிலை மாற வேண்டும். நமது கொள்கைகள், திட்டங்கள், ஐந்தாண்டுத் திட்டங்கள் ஆகியவை நமது முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

ஆனால், இன்னும் நமக்கு வேதனையளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் சராசரி மனிதன் இன்னும் சுதந்திரத்தின் சுவையை சுவைக்கவில்லைஎன்பதுதான்.

சுதந்திரத்துக்குப் பின் நம் இந்திய மக்களிடையே காணப்பட்ட சகிப்புத்தன்மை, அஹிம்சை, வேற்றுமையில் ஒற்றுமை காணுதல், நிலையான கொள்கைகள்ஆகியவற்றால்தான் இன்று இந்திய மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டபோது ஆண், பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்து நாம் விடுபட்டு விட்டாலும், மூடநம்பிக்கைகளில் ஊறித்திளைக்கும் சில மாநிலங்களும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றன.இது வேதனைக்குரிய விஷயமாகும்.

பத்திரிக்கைகளை நாம் திறந்து பார்த்தால் வரதட்சணைச் சாவுகள் தான் நம் கண்முன் தெரிகின்றன. பெண்கள், அவர்களது கணவன் வீட்டில் மிகவும்கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக, வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்தும் கணவன்மார்களும், மாமியார்களும் அதிகரித்து வருவதுவருத்தமான விஷயம். இன்றைய நாளில் பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் எதுவுமேயில்லை. அவர்களது வீடுகள் கூட அவர்களுக்குப் பாதுகாப்பானஇடமாக இருப்பதில்லை.

சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல், இந்திய நாடு விதவைகளின் கண்ணீரில் நனைந்து கிடக்கிறது. இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிராககொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் கடத்தப்பட்டும், கற்பழிக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வருவது மிகவும் கொடுமையானவிஷயமாகும். பெண்கள் கடத்தப்பட்டு விபச்சார விடுதிகளுக்கு விற்கப்படுவது போன்ற கீழ்த்தரமான செயல்கள் நினைக்கவே அச்சப்பட வைக்கிறது.

நாட்டில் அரசியல்வாதிகளே வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள் என்பது மிகவும் துரதிர்ஷ்டமான விஷயமாகும்.

நாட்டில் உள்ள ஏழை மக்களின் உயர்விற்காகவும், பெண்களின் நிலை உயர்விற்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று தனதுசுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X