வங்கதேச கிரிக்கெட் கேப்டன் ஆனார் நைமூர்
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
நைரோபியில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நாக் அவுட்கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் வங்கதேச அணியின் கேப்டனாக நைமூர்ரஹ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே செல்லும் வங்கதேச அணியின் கேப்டனாகவும்இவரே இருப்பார். இதுவரை அமினூல் இஸ்லாம் கேப்டனாக இருந்தார்.
புதிய கேப்டன் ரஹ்மான், 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 327 ரன்கள்எடுத்துள்ளார். எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் லண்டனில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் வங்கதேச அணிக்கு டெஸ்ட்அந்தஸ்து தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நைரோபி போட்டியில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 கிரிக்கெட் நாடுகளும் கலந்துகொள்கின்றன. அக்டோபர் 3-ம் தேதி இப்போட்டித் தொடர் துவங்குகிறது.












Click it and Unblock the Notifications