இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் வரும் ... மிரட்டுகிறது பாக்.

Subscribe to Oneindia Tamil

இஸ்லமாபாத்:

இந்தியா - பாகிஸ்தானிடையே காஷ்மீர் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனையால்மிகப் பெரிய போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று பாகிஸ்தானின்வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் எச்சரித்துள்ளார்.

அப்துல் சத்தார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் நாட்டுக்கு இடையே நிலவி வரும் பிரச்சனை போருக்கு வழிவகுக்கும். அந்தப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயமும்உள்ளது. ஏனென்றால் இரு நாடுகளுமே அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட்டாலே இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நட்புறவுமலரும். அந்த பேச்சு வார்த்தையும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை வகுத்துள்ளசட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.

பாகிஸ்தான் பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளது.ஆனால் இந்தியா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரியவில்லை. இந்தியா பேச்சுவார்தையைதள்ளிப் போட்டு வந்தால் எதிர்மறையான விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

ஹிஜ்புல் மூஜாஹுதீன் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதற்கு இந்தியாவே காரணம்.ஜுன் மாதம் 24-ம் தேதி சண்டை நிறுத்தத்தை முஜாஹிதீன் அறிவித்தது. அனைத்துஅமைப்புகளும் அந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று பாகிஸ்தான்விடுத்த கோரிக்கை சரியானதுதான்.

அமர்நாத்தில், 100 பேருக்கும் மேல் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. அதுகுறித்து ஒரு தலைப்பட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்.

அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் பாகிஸ்தான் அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில்இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு கூறியுள்ளார் என்றார் சத்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+