வலுக்கட்டாயமாக எனது தாயாரின் பதவி பறிப்பு.. ஸ்ரீமாவோ மகன் புகார்
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா பிரதமர் பதவியிலிருந்து எனது தாயாரை வலுக்கட்டாயமாக நீக்கி விட்டார் என்று ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் மகன்அனுரா பண்டாரநாயகா குற்றம் சாட்டியுள்ளார்.
அனுரா பண்டாரநாயகா இலங்கை பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி: எனது தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா தானாக பதவி விலகவில்லை. எனதுமூத்த சகோதரியும், இலங்கை அதிபருமான சந்திரிகாதான் அவரைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே எனது தாயார் பதவி விலகத் திட்டமிட்டு இருந்தார். பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் 2 முறை அவரைசந்தித்துப் பேசினேன். அப்போதுதான் அவர் கட்டாயப்படுத்தி பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதை அறிந்தேன்.
ராஜினாமா கடிதத்தை தயாரித்து அதில் வற்புறுத்தி கையெழுத்து வாங்கியுள்ளார் சந்திரிகா என்று பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் அனுராபண்டாரநாயகா.












Click it and Unblock the Notifications