குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை
கோவை:
குடும்பத் தகராறில் குழந்தையைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை துடியலூரை அடுத்துள்ள செங்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் கோடியப்பன். இவருக்கு 5ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 வயதில் ரேணுகா என்ற பெண் குழந்தை உள்ளது. இவரது மனைவிஉமாராணி (27). மைத்துனர் அய்யனாருடன் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.
கோடியப்பன் ஒரு காகிதப் பெட்டி தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்தஇரண்டு நாட்களுக்கு முன்னர், உமாராணி கணவனுக்குத் தெரியாமல் அருகில் உள்ள கோயிலில் குழந்தைக்குமொட்டையடித்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த கணவன் கோடியப்பன், உமாராணியைத் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த உமாராணி, வீ ட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது சேலையால் குழந்தையின் கழுத்தைநெறித்துக் கொன்றார். பின்னர் அதே சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications