கோபால் காட்டுக்குச் செல்வது தாமதமாகலாம்
சென்னை:
வீரப்பன் கோரியபடி மைசூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தடா கைதிகள்விடுவிக்கப்படாததால் அவனைச் சந்திப்பதற்காக நக்கீரன் கோபால் மீண்டும்காட்டுக்குள் செல்வது தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது மைசூரில் முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வரும்இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 16-ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரப்பனை மீண்டும் சந்திப்பதற்காக நக்கீரன் கோபால் 16அல்லது 17-ம் தேதி காட்டுக்குச் செல்வதாக இருந்தார்.
தற்போது தடா வழக்குகள் தள்ளுபடி செய்யப்படாததாலும், வழக்கு விசாரணை 16-ம்தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாலும், கோபால் மீண்டும் வீரப்பனைச் சந்திக்கச்செல்வதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.
மைசூர் சிறையிலிருந்து 51 தடா கைதிகளும் விடுக்கப்பட்டால், அவர்கள்விடுதலையான போட்டோவை தன்னுடன் எடுத்துச் சென்று வீரப்பனிடம் காட்டகோபால் திட்டமிட்டிருந்தார். அப்போதுதான் நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன்சம்மதம் தெரிவிப்பான் என்று கோபால் கருதினார்.
ராஜ்குமார் மற்றும் பிற பிணைக் கைதிகளை மீட்க வேண்டுமானால், 51 தடாகைதிகளும் விடுக்கப்பட வேண்டியது முக்கியமானதாக கூறப்பட்டது. தற்போது அதில்தேக்கம் ஏற்பட்டிருப்பதால் கோபால் காட்டுக்குள் செல்வதும் தாமதமாகலாம் என்றுதெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications