"உண்மை எப்போதும் உண்மையாகவே இருக்க வேண்டும்

Subscribe to Oneindia Tamil

கோவை:

உண்மை எப்போதும் உண்மையாகவே இருக்க வேண்டும். அதனுடன் பொய் என்ற நச்சுப் பொருளைக் கலந்துசமுதாயத்தை நஞ்சாக்கி விடக் கூடாது என்று பிரபல பத்திரிகையாளர் குருமூர்த்தி கூறினார்.

கோவையில் பொது விவாதங்கள் நடத்துவதற்காக "விஜில் என்ற அமைப்பு துவக்கி வைக்கப்பட்டது. இதில்,பத்திரிகையாளர் குருமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:

பெரும் மனிதர்களைக் காட்டிலும், சாதாரண மனிதர்கள் தான் அதிகம் சாதிக்கின்றனர். சிறு அமைப்புகள் நிறையகருத்துக்களை விவாதிக்கின்றன. மக்கள் கூடும் இடங்களில் எல்லாவற்றிலும் ஒரு விவாதம் நடந்து வருகிறது.இவையெல்லாம், அறிவிக்கப்படாத விவாதங்கள் தான். உண்மையை விவாதிப்பதை விட, உண்மையற்றசெயல்களை விவாதிப்பது தான் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தினர். ஆனால்,இவற்றையெல்லாம் சகிப்புத் தன்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சாதாரண மக்கள் தான். ஒரு இயக்கம்கடவுளை எதிர்த்து கறுப்பு உடையணிந்தது.

ஆனால், இன்றைக்கும் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு கோடி மக்கள் அதே கறுப்பு உடையில் தான் ஐயப்பனைத்தரிசிக்க சபரிமலைக்குச் செல்கின்றனர். செவ்வாடை அணிந்து தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியைக் காணச்செல்கின்றனர்.

இந்தியா எல்லாவற்றிலும் வேறுபட்ட நாடு. ஆனால், எந்தப் பிரச்னை என்றாலும் எளிதில் ஒன்றுபடக் கூடிய நாடு.இங்கு ஆதிகாலம் முதல் வாழ்ந்தவர்கள் ஒரு கடவுளை மட்டும் வைத்திருக்கவில்லை. முப்பத்து முக்கோடிகடவுள்களை படைத்திருக்கிறார்கள்.

இந்திய மண்ணில் அந்நிய ஆட்சியே பரவாயில்லை என்ற கருத்து இன்றும் உள்ள சுதந்திரப் போராட்டத்தியாகிகளிடம் நிலவி வருகிறது. நேர்மையான வெளிநாட்டினரின் ஆட்சியை விட, லஞ்ச ஊழல் மிகுந்த இந்தியஆட்சியைத் தான் நாம் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளோம்.

இந்தியாவில் கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பு நடக்கின்றன. கிறிஸ்துவ ஆலயங்கள் தாக்கப்படுகின்றன. இந்தசம்பவங்கள் நிகழ்ந்தபோதெல்லாம், நமது நாட்டில் உள்ள பத்திரிக்கைகளும், டி.விக்களும் அலறின.கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்டு விட்டனர். இந்துக்கள் கற்பழித்து விட்டனர். கிறிஸ்துவ ஆலயங்கள் மீதுஇந்துக்கள் தாக்குதல் நடத்தி விட்டனர் என்றன. அரசை எதிர்த்து கடும் கண்டனக் குரல்கள் எழுப்பின. அரசைக்கண்டித்து தலையங்களை காரசாரமாக எழுதின.

ஆனால், விசாரணைக்கு பிறகு கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பு சம்பவத்தில் கிறிஸ்தவர்களுக்கும் தொடர்பு இருந்ததுதெரியவந்தது. கிறிஸ்துவ ஆலயங்களின் தாக்குதலில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருந்தது. இந்த உண்மைகள்எல்லாம் வெளியானபோது, பத்திரிக்கைகள் எல்லாம் வாயடைத்து போய் விட்டன. உண்மையை எழுதக் கூடஅவர்கள் விரும்பவில்லை. மொத்தத்தில் இந்தியாவின் கவுரவத்தையே இவை சீர்குலைத்து விட்டன.

பயர், வாட்டர் என்று படங்களை எடுக்கின்றனர். பயர் படத்தில் நமது இந்தியக் குடும்பத்தில் உள்ள பெண்கள்எல்லாம் "லெஸ்பியன் ஆக உலகுக்கு உணர்த்தப்படுகின்றனர். வாட்டர் படத்தை எடுத்து, நமது நாட்டில் உள்ளவிதவைகள் எல்லாம் வேசிகள் என்ற பட்டத்தைச் சூட்டுகின்றனர். இந்தியாவில் மட்டும் இப்படங்களைத்திரையிட்டால் மற்ற நாடுகளுக்குச் சேராது என ஆங்கிலத்தில் படம் எடுக்கின்றனர்.

இந்தியாவின் கவுரவத்தை சீர்குலைக்கும் இந்த நடவடிக்கைகளை தடுத்தால், அது சட்டவிரோத செயலாகிவிடுகிறது. இந்தியாவின் மானம், ஆங்கிலப்படத்தின் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பலேறிவிடுகிறது.

அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதி கர்ப்பிணிகள் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகள் என்ற கொடுமை இருந்துவருகிறது. இந்திய நாட்டில் எந்த மூலையில் இப்படி எல்லாம் நடக்கிறது? சிறிய விசயத்தை பெரியதாக்கி அரசிற்குமட்டுமல்லாமல், நமது தாய் மண்ணிற்கே இழிவை ஏற்படுத்தும் இந்தப் போக்கு அடியோடு மாற வேண்டும்என்றார் குருமூர்த்தி

விழாவில், முன்னாள் நீதிபதி செங்கோட்டு வேலன், அமைப்பின் பொதுச் செயலர் கார்த்திகேயன், கோவை எம்.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+