"குரல் கொடுக்கிறார் ரஜினி
சென்னை:
வீரப்பன் பிடியில் சிக்கி 16 நாட்களாக காட்டில் பிணைக் கைதியாக இருக்கும் கன்னடசூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை மீட்க, தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "குரல்கொடுக்கிறார்.
ராஜ்குமாரை விடுவிக்கும்படி வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினி பேசிய"கேசட் உடன் அரசு தூதர் நக்கீரன் கோபால் 16ம் தேதி மீண்டும் காட்டுக்குள்செல்கிறார்.
சந்தன வீரப்பனின் ஆள் கடத்தல் விவகாரம் நடைபெறும் போதெல்லாம் அரசுக்கும்,அவனுக்கும் இடையே "கேசட் மூலம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதேபாணியில் இப்போதும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடத்தி வந்தவரை விடுவிக்க வீரப்பன் "கேசட் மூலம் நிபந்தனைகள் விதிப்பதும்,அதற்கு அரசு தரப்பில் பதில் கேசட் அனுப்புவதும் என்பது பழகிப் போன ஒன்றாகிவிட்டது.
ஆனால், இம்முறை வீரப்பன் பிடியில் சிக்கியிருப்பவர் மிகப் பிரபலமானவர்என்பதால், அவரை மீட்கும் முயற்சிகளுக்கு ரஜினிகாந்த் எல்லா வகையிலும் உதவமுன் வந்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக் கிழமை தமிழக முதல்வர் கருணாநிதியையும், அரசு தூதர்நக்கீரன் கோபாலையும் அடுத்தடுத்துச் சந்தித்துப் பேசிய அவர், இப்பிரச்னையில் தாம்எந்த வகையில் உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதன்படி அரசு தரப்பு தகவல்களுடன், ரஜினியின் வேண்டுகோளையும் வீரப்பனுக்குதெரிவிக்கும் வகையில் புதிய கேசட் ஒன்று தயார் செய்யப்படுகிறது.
இந்த கேசட்டில் வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினி உருக்கமாக பேசதீர்மானித்துள்ளார். அந்த கேசட்டை அவரே தயாரித்து முதல்வர் கருணாநிதியிடம்ஒப்படைக்கிறார். அந்த கேசட் நக்கீரன் கோபால் மூலம் வீரப்பனுக்குஅனுப்பப்படுகிறது.
அநேகமாக 16ம் தேதி அரசு தூதர் கோபால், வீரப்பனை சந்திக்க மீண்டும் காட்டுக்குள்செல்வார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications