திட்டங்களை செயல்படுத்துவதில் குழப்பம் ..கூறுகிறது உலக வங்கி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

இந்தியாவில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களில் குறைகள் இருப்பதாக உலகவங்கி கூறியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளி வரும் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையில் இத்தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்குவது தொடர்பான பல திட்டங்களில் பெரிய அளவில்குறைபாடுகள் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பலருக்கு முறையாக நிவாரணம்கிடைப்பதில்லை. பலருக்கு இதுகுறித்து எதுவும் தெரியாமல் உள்ளது. அவர்களுக்குஇந்தத் திட்டங்கள் தெரிவதற்கான வழிமுறைகள் அரசுத் தரப்பில்மேற்கொள்ளப்படவில்லை என்று உலக வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மழை, வெள்ளத்தால் வீடிழந்தஆயிரக்கணக்கான கிராம மக்கள் இன்னும் மாற்று இருப்பிடம் கிடைக்காமல்அவதிப்படுகின்றனர். வீடிழந்தவர்களுக்கு மாற்று இருப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளஹாந்திதுவா காலனியில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. அங்கு கடைகள் சரியாகஇல்லை. சமூகக் கூடத்தைப் பயன்படுத்துவதற்கு யாரும் இல்லை.

உலக வங்கியின் இயக்குநர் எட்வர்ட் லிம் கூறுகையில், சில திட்டங்களில்குறைபாடுகள் உள்ளன. பல திட்டங்கள் சரிவர செயல்படுத்தப்படாமல் இருப்பதால்நாங்கள் ஏமாற்றமடைந்து உள்ளோம் என்றார்.

24 திறந்தவெளி கழிப்பிடங்கள் உள்ள காலனிகளில் சுகாதாரமான கழிப்பிட வசதியைஏற்படுத்துவதற்காக உலக வங்கி 530 மில்லியன் டாலர் நிதி உதவி அளித்தது. ஆனால்இந்தத் திட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு கோல் இந்தியா நிறுவனம் கேட்டுக்கொண்டதால் உலக வங்கி தனது திட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது.

இதுபோல பல திட்டங்கள் குளறுபடியாக உள்ளதாகவும் உலக வங்கி கூறியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+