புச்சிபாபு கிரிக்கெட் ... 14 அணிகள் பங்கேற்பு
சென்னை:
சென்னையில், புதன்கிழமை துவங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளஅகில இந்திய புச்சிபாபு அழைப்பு கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து கிரிக்கெட்அகாதெமி அணி உள்பட 14 அணிகள் கலந்து கொள்கின்றன.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகை ரூ. 30,000லிருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு அணியும் இம்முறைபோட்டியில் இருப்பதால் புச்சிபாபு கிரிக்கெட் தொடர் எதிர்பார்ப்பைஏற்டுத்தியுள்ளது.
இருப்பினும் சென்னை நகரை அச்சுறுத்தி வரும் மழை குறுக்கிடாதவரை போட்டிகள்எதிர்பார்த்தபடி செல்லும் என்று தெரிகிறது.
போட்டியில் இருக்கும் முக்கிய அணிகள்: நடப்புச் சாம்பியன் கர்நாடக கிரிக்கெட் சங்கலெவன் அணி, கடந்த ஆண்டுப் போட்டியில் இரண்டாவது இடம் பெற்ற ஹைதராபாத்கிரிக்கெட் சங்கம், ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், எம்.ஏ.சி. டி.என்.சி.ஏ,டி.என்.சி.ஏ. பிரசிடென்ட் லெவன், மாவட்டங்கள், அசோசியேட்டட் சிசி,எம்.ஆர்.எப், கேரளா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியவை பங்கேற்கும் அணிகள்.
தற்போதைய இந்திய அணி வீரர்களில் ஸ்ரீநாத், வி.வி.எஸ். லட்சுமண், ஹர்பஜன் சிங்,ஸ்ரீராம் ஆகியோர் மட்டுமே இத்தொடரில் கலந்து கொள்வர் என்று தெரிகிறது.இவர்களுடன், பிரவீன் அம்ரே, லெக் ஸ்பின்னர் நரேந்திர ஹிர்வானி, சேத்தன் சர்மா,பங்கஜ் தர்மானி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications