வீரப்பன் கோரும்3 தமிழ் தீவிரவாதிகளின் காவல் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

பவானி:

வீரப்பன் கோரியுள்ள 5 தமிழ் தீவிரவாதிகளில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேருடைய காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்ய வேண்டுமானால் 14 நிபந்தனைகளை தமிழக, கர்நாடக அரசுகள் நிறைவேற்றவேண்டும் என்று வீரப்பன் கூறியுள்ளான். தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டும் என்பது அவற்றில் ஒன்று.

இந்த 5 தடா கைதிகளில் முத்துக்குமார், சத்யமூர்த்தி, மணிகண்டன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரும் தமிழர் விடுதலைப்படை என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.ஈரோடு மாவட்டம் வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்தைத் தாக்கி துப்பாக்கிகளை கொள்ளையடித்த வழக்கில்கைதானவர்கள் இவர்கள்.

தடா சட்டத்தின் கீழ் இவர்கள் மேல் வழக்குத் தொடரப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்களுக்குவிதிக்கப்பட்ட ஒரு ஆண்டு கால சிறைவாசம் முடிந்ததைத் தொடர்ந்து அவர்கள் தடா கைதிகளாக சிறையில்அடைக்கப்பட்டனர்.

மணிகண்டன், சத்யமூர்த்தி, முத்துக்குமார் ஆகிய மூன்று பேரும் திங்கள்கிழமை பவானி கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டனர். 3 பேரையும் 25 ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மூன்று பேரும் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போலீஸ் வேனில் இருந்தபடிஅங்கிருந்த நிருபர்களிடம் மூன்று பேரும் பேசுகையில், எங்களை விடுவிப்பது முக்கியமல்ல. காவிரியில்உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் உரிய கவனம்செலுத்தத் தவறி விட்டன.

தனிஈழம் கேட்டு பிரபாகரன் போராடி வருகிறார். அதுபோல் நாங்கள் இங்கே தமிழர் நலனிற்காக வீரப்பன்தலைமையில் போராடி வருகிறோம். வீரப்பனின் கோரிக்கைகளில் எங்களை விடுதலை செய்யும் கோரிக்கை தவிரபிற கோரிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் நலனைக் குறிக்கோளாகக் கொண்டவையே. இந்த நியாயமானகோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+