சூயிங்கம் மென்றதால் மாணவன் கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை:

சூயிங்கம் மென்ற பள்ளி மாணவனைக் கொன்ற ஐந்து வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவைநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகன் சிவராஜ் (17). இவர் செல்வபுரம்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். தினமும் கல்லாமேடு என்ற பகுதி வழியாக பள்ளிக்குச் சென்றுவந்தார்.

சிவராஜூக்கு சூயிங்கம் போடும் பழக்கம் இருந்து வந்தது. கல்லாமேட்டைச் சேர்ந்த ஒரு வாலிபர் சிவராஜைகண்டித்துள்ளார். இனிமேல் சூயிங்கம் போட்டுக் கொண்டு இந்தப் பகுதிக்கு வரக் கூடாது என மிரட்டியுள்ளார்.ஆனால் சிவராஜ் இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சூயிங்கம் மென்றவாறே இப்பகுதியில் வந்துள்ளார்.

இதனையடுத்து, சிவராஜ் கடந்த 17.8.99ம் தேதி முத்துச்சாமி காலனியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போதுஅங்கு அக்பர் அலி (19), அப்பாஸ் (19), முஜிபூர் ரஹ்மான் (20), சுரேஷ் (18), அப்துல் நாசர் (20) ஆகிய ஐந்துபேரும் சிவராஜை வழிமறித்து மிரட்டியுள்ளனர். இதற்கு அஞ்சாத சிவராஜ் அவர்களை எதிர்த்து பேசியுள்ளார்.இதில் ஏற்பட்ட தகராறில் சிவராஜை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிவராஜ் அந்தஇடத்திலேயே இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 11 இளைஞர்களைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். வழக்கைவிசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி சொக்கலிங்கம், மாணவனைக் கொன்ற ஐந்து இளைஞர்களுக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+