எவரெஸ்டில் ஹோட்டலா...? கொதிக்கிறார் ஹில்லாரி

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்:

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், ஹோட்டல் கட்டினால் சுற்றுப்புறச் சூழல் மாசு பட்டு விடும் என்று எவரெஸ்ட்டில் முதன் முதலில்ஏறிய எட்மண்ட் ஹிலாரி கூறியுள்ளார்.

1953 ல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தவர் எட்மண்ட் ஹிலாரி. இவர்தான் எவரெஸ்டில் முதன் முதலில் ஏறியவர். தற்போது 83 வயதாகும்ஹிலாரி, நத்திங் வென்ச்சர் நத்திங் வின் என்ற சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார்.

சுயசரிதையில் தனது மலை ஏறிய அனுபவங்கள் குறித்தும், வேறு பல விஷயங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அதில் எவரெஸ்ட் மலையில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மலையில் இருக்கும் சிறு சிறு சிகரங்களை சமப்படுத்தி அப்பகுதியில் ஹோட்டல் கட்ட வேண்டும் என்று இந்திய அரசு திட்டமிட்டுள்ளதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஹோட்டல் கட்டினால் அது சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற பனி மலைகளுக்குவருபவர்கள் இயற்கை விரும்பிகளாக இருக்க வேண்டும்.

மலையில் ஏற விரும்புகிறவர்கள் அதற்கான இன்னல்களையும், கஷ்டங்களையும் ரசித்து அனுபவிக்க வேண்டும். அப்படி ரசிக்க முடியாதவர்கள்,இதுபோன்ற மலைகளுக்கு வருவதற்கே லாயக்கில்லாதவர்கள். மலைக்கு வந்து தங்கி சொகுசாக ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கு இது சரியானஇடமல்ல.

சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக ஹோட்டல் கட்டக் கூடாது என்று கூறியுள்ளார் எட்மண்ட் ஹிலாரி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+