புரட்சி குறித்து விசாரிக்க பிஜி அதிபர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சுவா:

பிஜியில் நடந்த புரட்சி மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க அதிபர் ராடு ஜோசேபா இலோய்லோ விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

பிஜியில், இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர செளத்ரி தலைமையிலான அரசு ஸ்பீட்தலைமையிலான புரட்சிக்காரர்களால் கலைக்கப்பட்டு செளத்ரி பதவி நீக்கம்செய்யப்பட்டார். அதற்குப் பிறகு ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டு இறுதியில் தற்போதுபுது அரசு பதவியேற்றுள்ளது.

தற்போது புரட்சி மற்றும் வன்முறை, இதற்கான பின்னனி காரணம் என்ன என்பதைவிசாரிக்க அந்நாட்டு அதிபர் முடிவெடுத்துள்ளார். அதிபரால் அமைக்கப்படும்விசாரணைக் குழு கலவரத்திற்கு பின்னனியில் உள்ள உண்மையைக் கண்டறியும்.

விசாரணையின் அடிப்படையில், மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல்தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் பிஜியின் அரசியல் சட்டமும் மாற்றியமைக்கப்பட உள்ளது. பிஜி புதிய பிரதமர்லைசீனியா குரேசி இதுகுறித்துக் கூறுகையில், அரசியல் சட்டம் தொடர்பாக நான்குஉறுப்பினர் குழு ஒன்று அமைக்கப்படும்.

அரசியல் சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து இது பரிந்துரைக்கும்.இந்தக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை நடை பெறுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+