ஆன்மீகத்தில் நுழைகிறார் "சி.பி.ஐ. கார்த்திகேயன்

Subscribe to Oneindia Tamil

கோவை:

இந்திய மனித உரிமைக் கமிஷன் தலைவர் கார்த்திகேயன் ஓய்வு பெற்றார். ஓய்வு காலத்தில் ஆன்மீகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

ஆழியாறில் நடந்த விழாவில் இந்திய மனித உரிமைக் கமிஷனர் கார்த்திகேயன் இந்த தகவலைத் தெரிவித்தார். அவர் பேசுகையில், மனித உரிமைக் கமிஷன்தலைவர் பதவியிலிருந்து திங்ள்கிழமையுடன் ஓய்வு பெறுகிறேன்.

ஓய்வு பெற்ற பின்னர் ஆன்மிகப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். மகரிஷியின் தத்துவங்கள் மீது எனக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகநாட்டம் பிறந்துள்ளது.

எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான அறிவியல் பூர்வமான தத்துவங்கள் நிறைந்தவை தான் மகரிஷியின் தத்துவங்கள்.

பிரிவினைவாதங்களைத் தடுக்க மகரிஷி சொன்ன யோசனைகள் மகத்தானவை. பிரிவினை பற்றி யாரும் நினைக்காமல், அவரவர் கடமையை மனிதகுலத்திற்குச் செய்தால், சமுதாயம் அமைதி அடையும் என்றார்.

கார்த்திகேயன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டும் அதனை மறுத்து, தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+