விரைவில் விடுவிக்கப்படுவார் ராஜ்குமார் - கர்நாடக அமைச்சர்
பெங்களூர்:
சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட ராஜ்குமார் விரைவில்விடுவிக்கப்படுவார் என கர்நாடக அமைச்சர் மல்லிகார்ஜுனா கார்கே நம்பிக்கைதெரிவித்துள்ளார்.
கார்கே திங்கள்கிழமையன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர்கூறியதாவது:
வீர்பனின் கோரிக்கைகளின்படி கம்பால பள்ளியில் கொலை செய்யப்பட்டதலித்துகளின் குடும்பத்துக்கு கர்நாடக அரசால் வழங்கப்பட்ட நஷ்ட ஈடு, தடாகைதிகளை விடுவிக்க கர்நாடக அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து தமிழக அரசுக்குதெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரப்பனை மீண்டும் கோபால் சந்திப்பது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி,கோபாலோடு ஆலோசனை செய்து முடிவெடுப்பார். வீரப்பன் விதித்துள்ளநிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய அனைந்து நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அதற்கான காரணங்களும்தெரிவிக்கப்பட்டுள்ளன.
ராஜ்குமார் கடத்தலுக்கு பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட நிலைமை, தற்போதைய நிலைமைகுறித்து மத்திய அரசுக்கு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள அனைத்த மாவட்டங்களிலும் இயல்பு நிலை திரும்பி விட்டதுபள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. பெங்களூரில் மட்டும் மதுக்கடைகள்மூடப்பட்டுள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications