பழிக்குப் பழி ... கத்தியுடன் கோர்ட்டுக்கு வந்த 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பழிக்குப் பழி வாங்குவதற்காக நீதிமன்றத்திற்குள் கொலை வெறியுடன் கையில்கத்திகளுடன் நுழைந்த இருவரை மதுரை போலீஸார் கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் கணேசன், பழனி. இவர்களில் கணேசனின்சகோதரரை ஒரு கும்பல் சமீபத்தில் வெட்டிக் கொன்றது. இதுதொடர்பான வழக்குமதுரை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர். தினசரி அவர்கள்நீதிமன்றப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். வழக்கம்போல, திங்கள்கிழமையும்அ வர்கள் நீதிமன்றத்திற்கு கையெழுத்துப் போட வந்திருந்தனர்.
அப்போது பழனியும், கணேசனும், ஆவேசத்துடன், கையில் கத்தியுடன் வந்தனர்.அப்போது அங்கிருந்த போலீஸார் இருவரையும் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
இருவரும் மாஜிஸ்திரேட் முன்ப ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications