13 தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம்
சென்னை:
காவல் துறையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்காக நாடு முழுவதும் 419போலீசாருக்கு குடியரசுத் தலைவர், பதக்கம் வழங்கப்பட்டுள்ளது, இதற்கானஅறிவிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
சுதந்திர தின விழாவையொட்டி பதக்கம் அறிவிக்கப்பட்ட இந்த 419 பேரில் 13 பேர்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் பெயர் விவரம்:
ஆர்.வி. கோபாலன், (கூடுதல் டி.ஜி.பி,மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவு), லத்திகாசரண் (ஐ.ஜி., லஞ்ச ஒழிப்புப் பிரிவு), என், மீனாட்சி சுந்தரம் (கூடுதல்கண்காணிப்பாளர்,காஞ்சிபுரம்), சி.வி.ராவ் (டி.ஐ.ஜி. வேலூர்), ஏ.பி. முகம்மது அலி(டி.ஐ.ஜி., விழுப்புரம்), கே.கோபாலகிருஷ்ணன் (கூடுதல் கண்காணிப்பாளர்,சென்னை), ஓ.பி. ராமையா (துணை கண்காணிப்பாளர் , சென்னை),பி.எஸ்.சேதுராமன் (துணைக் கண்காணிப்பாளர் சென்னை), பி.மங்கையர்க்கரசி(இன்ஸ்பெக்டர் , சென்னை), சி.விவேகானந்தன் (இன்ஸ்பெக்டர், கோவை), ஏ.எஸ்.நந்த குமார் (இன்ஸ்பெக்டர், கோவை), பாலகிருஷ்ணன் (சப்-இன்ஸ்பெக்டர்,விருதுநகர்), கே.கந்தசாமி (ஹவில்தார், ஆவடி).












Click it and Unblock the Notifications