கார் ஏற்றி இசைக் கலைஞரைக் கொன்ற நேபாள இளவரசர்
காத்மாண்டு:
நேபாள அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் பரஸ், அதிவேகமாக கார் ஓட்டிச்சென்று பிரபல இசைக் கலைஞரைக் கொன்ற வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு முன்பு பரஸ் டிஸ்கோ கிளப்பிற்குச் சென்றிருந்தார். பின்னர்அங்கிருந்து கோபத்துடன் அவர் வெளியேறினார். மன்னர் மகேந்திராஅறக்கட்டளைக்குச் சொந்தமான காரில் வீடு திரும்பினார். அப்போது அவர் அதிவேகமாக காரை செலுத்தியதாகத் தெரிகிறது.
இந்த சமயத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பிரபல இசைக் கலைஞர் பிரவீன்குருங் மீது பரஸ் ஓட்டிச் சென்ற கார் மோதியது. இதில் குருங் சம்பவ இடத்திலேயேஇறந்தார். இதையடுத்து பரஸ் நிற்காமல் சென்று விட்டார்.
அவரைத் துரத்திக் கொண்டு போலீஸார் பின்னாலேயே வந்தனர். இருப்பினும் பரஸ்நிற்காமல் சென்று விட்டார். மேலும், போலீஸாரை நோக்கித் துப்பாக்கியைக் காட்டிமிரட்டியும் உள்ளார். இருந்தும் போலீஸார் அவரை மடக்கி தனிக் கார் ஒன்றில் அவரதுவீட்டுக்குக் கூட்டிச் சென்றனர்.
நேபாளத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரஸ் மீது சட்டப்படிநடவடிக்கை எடுக்க மன்னர் பீரேந்திரா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கோரிக்கை எழுந்தது. நாடு முழுவதிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், விபத்துக்குத் தான் தான் காரணம் என்று நேபாள நாட்டு ராணுவ வீரர்ஒருவர் போலீஸில் கூறி சரண் அடைந்துள்ளார். ஆனால் பரஸைக் காப்பதற்காக இவர்பலிகடாவாக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
பரஸின் தந்தை, இளவரச் கியானேந்திராதான் மன்னர் மகேந்திரா சுற்றுச்சூழல்அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications