கைவசம் 7.5 லட்சம் டன் அரிசி ... கூறுகிறார் அமைச்சர்
சென்னை:
தமிழகத்தில் 7.5 லட்சம் டன் அரசி கையிருப்பில் இருப்பதாக மாநில உணவு அமைச்சர்கே.என், நேரு தெரிவித்தார்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற மண்ணெண்ணெய் பங்க் திறப்பு விழாவில்அவர் பேசியதாவது.
பொது விநியோக முறையில் எந்த முறைகேடுகளுடன் நடைபெறாமல் தடுக்கபல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
கிடங்குகளில் இருந்து மாலை 4 மணிககு மேல் அரசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றிச்செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது, ரேஷன் கடைகளில் மக்களுக்குவிநியோகிக்கப்படும் பொருட்களின் அளவு சரியாக இருக்கும் வகையில் புதிதாககம்ப்யூட்டர் அளவுகோல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தற்போது 7.5 லட்சம் டன் அரிசி கையிருப்பில் உள்ளது. சத்துணவு, ரேஷன்விநியோகம் என எல்லாவற்றுக்கும் சேர்த்து மாதம் லட்சம் டன் அரிசி வழங்கப்பட்டுவருகிறது.
தமிழகம் முழுவதும் 500 இடங்களில் மண்ணெண்ணெய் பங்க்குகளைத் திறக்கதிட்டமிடப்பட்டுள்ளது என்றார் நேரு.
இவ்விழாவில் சென்னை மேயர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர் சைதைகிட்டு உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.












Click it and Unblock the Notifications