51 தடா கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து வழக்கு

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

வீரப்பன் கோரிக்கைக்குப் பணிந்து 51 தமிழ் தடா கைதிகளை விடுவிக்கக் கூடாது எனவீரப்பனால் கொல்லப்பட்ட முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஷகீல் அகமதுவின் தந்தைநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பன், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை 15 தினங்களுக்கு முன்கடத்திச் சென்று காட்டுக்குள் பிணைக் கைதியாக வைத்துள்ளான். அவர்களைவிடுவிக்க 14 கோரிக்கைகளை விடுத்துள்ளான். அதில் ஒன்று மைசூர் சிறையில் தடாகைதிகளாக இருக்கும் 51 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பது.

அதன்படி அந்த 51 பேரையும் விடுவிப்பது என கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது.ஆனால் தடா கைதிகளை விடுவிக்கக் கூடாது என மைசூர் நீதிமன்றத்தில் ஷகீல்அகமதுவின் தந்தை அப்துல் கரீம் மனு தாக்கல் செய்துள்ளார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஷகீல் அகமது.கர்நாடக அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர். மனுவை ஏற்ற நீதிபதிராஜேந்திர பிரசாத், மனு மீது கர்நாடக அரசு புதன்கிழமைக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து தடா கைதிகளின் விடுதலை தாமதமாகும் என்று தெரிகிறது. வழக்கைஅரசு திரும்பப் பெற்றுக் கொண்டாலும், தடா கைதிகளால் பாதிக்கப்பட்டதாக கூறும்அப்துல் கரீமும் அவரது குடும்பத்தாரும் எதிர்ப்பதால் கைதிகளை விடுவிக்கநீதிமன்றம் மறுக்கலாம் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+