சிறைக்கு வந்த நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை மத்திய சிறையில் நீதிமன்றமும், சட்டஉதவி மையமும்செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த சிறை நீதிமன்றம், கைதிகள் மீதான சிறு, சிறு வழக்குகளை விசாரிக்கும். காவல் நீட்டிப்புக்காக கைதிகளைநீதிமன்றத்துக்கு அழைத்து வர வேண்டியதில்லை. மாதத்திற்கு ஒரு முறை இங்கு வரும் மாஜிஸ்ட்ரேட், கைதிகள்மீதான சிறு, சிறு வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறுவார்.

சட்ட உதவி மையத்தில் இரண்டு வக்கீல்கள், சட்ட உதவி மையத்தின் ஊழியர்கள் இரண்டு பேர் இருப்பார்கள்.சிறைக்கைதிகள் கொடுக்கும் மனுக்களைப் பெற்று அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க இந்த மையம் உதவிசெய்யும்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதபதி என்.கே.ஜெயின் இதைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

செய்த குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று யாரும் சிறையிலேயே கிடக்கக் கூடாது. சிறைக் கைதிகளுக்கு சட்டஉதவி வழங்க வேண்டும். அதற்காக இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை மத்திய சிறையில் சட்ட உதவிமையமும், நீதிமன்றமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்கள்பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம்.

தண்டனை பெற்ற கைதிகள் அப்பீல் செய்யக் கோரலாம். தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி சிறைகளில்நீதிமன்றங்களை உருவாக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றார்.

சட்ட அமைச்சர் ஆலடி அருணா பேசுகையில், இந்தியாவில் மொத்தம் 12 ஆயிரத்து 378 நீதிமன்றங்கள் உள்ளன.ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சராசரியாக 1553 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேங்கிக் கிடக்கும் வழக்குகளைவிரைவில் தீர்க்க வேண்டும் என்றால் புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும். இதற்கு எவ்வளவு செலவாகும்என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் மூன்றரை லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்க்க ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 598 நீதிமன்றங்கள் தேவை. இதற்கு ஆகும்செலவு ரூ 4 ஆயிரத்து 878 கோடி என்றார் ஆலடி அருணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+