ராஜ்குமார் கடத்தலில் கருணாநிதிக்கும் தொடர்பாம் என்கிறார் ஜெயா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி நடிகர் ராஜ்குமாரையும், அவரது 3 உறவினர்களையும் கடத்தி நாடகமாடிக்கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி என்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டுள்ள 8 பக்க அறிக்கை குறித்த விவரம்:

ஜூலை 30 ம் தேதி காஜனூரிலுள்ள வீட்டிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்கள் மூன்று பேரையும் சந்தனக் கடத்தல்வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் கடத்தினார்கள். இதற்கு மூல காரணம் கருணாநிதிதான். வீரப்பனை கருணாநிதிதான் பின்னாலிருந்து இயக்கிக்கொண்டிருக்கிறார்.

தனது நிர்வாகத் திறமையின்மை, ஊழலை மறைப்பதற்காகவே இந்த கடத்தல் நாடகத்தை அவர் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். இதற்கு வீரப்பனைத்துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் மக்களையும், பத்திரிக்கைகளையும் திசைதிருப்பியுள்ளார் கருணாநிதி.

குற்றவாளிகளுக்கோ, குற்றங்கள் புரிபவர்களுக்குத் துணை நிற்பவர்களுக்கோ அரசியலில் இடம் அளிக்கக் கூடாது என்று ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருந்தார். ஆனால் கருணாநிதி, ராஜ்குமார் விடுதலையில் யாரும் புகுந்து எந்தஇடையூறுகளையும் ஏற்படுத்தக் கூடாது என்று அறிக்கை விடுகிறார். இதன் மூலம் ஜனாதிபதியையே குறைகூறத் துணிந்து விட்டார் கருணாநிதி.

நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்களையும் வீரப்பன் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக தமிழக, கர்நாடக அரசுகள் அவன் விதித்துள்ள நிபந்தனைகள்எதையும் நிறைவேற்றக் கூடாது. அப்படிச் செய்தால் நாளை நம் நாட்டில் பல வீரப்பன்கள் உருவாகும் அவல நிலை ஏற்பட்டு விடும்.

கடந்த ஜூன் 1 ம் தேதி முதல் கர்நாடகாவிலிருந்து, தமிழகத்தின் மாதாந்திர பங்கான 78.5 டி.எம்.சி.தண்ணீர் வர வேண்டும். ஆனால் 6 டி.எம்.சி. நீரைக்கூட கருணாநிதி பெற்றுத் தரத் தவறி விட்டார்.

கருணாநிதியால் நீலகிரியில் தேயிலைத் தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியவில்லை. இதற்கிடையில் தற்போது வீரப்பன் மூலம் ராஜ்குமார்கடத்தல் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

மத்திய அரசு, 365-வது அரசியல் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விடச் செய்ய வேண்டும். அதைக்கர்நாடக அரசு மீறினால் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+