கார்கில் தியாகிகளுக்கு பெருமை சேர்த்த பிரிகேடியர்
புனே:
கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக புனேயைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிஒருவர் தனது கட்டிடங்களுக்கு கார்கில் தியாகிகளின் பெயர்களை வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு கார்கில் பகுதியில் ஊடுறுவிய பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை இந்திய வீரர்கள் கடுமையாகப்போராடி விரட்டியடித்தனர். இதில் ஏராளமான இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
கார்கிலில் உயிர்த்தியாகம் செய்தவர்களை வித்தியாசமாக நினைவு கூர்ந்துள்ளார் மகாராஷ்டிர மாநிலம் புனேநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் பிஜாவத். புனேயில், கான்த்வா பகுதியில்தனக்குச் சொந்தமான கிராபிக்கன் பாரடைஸ் பகுதியில் உள்ள 7 கட்டிடங்களுக்கு கார்கில் தியாகிகளின்பெயர்களை வைத்துள்ளார்.
கேப்டன் அனூஜ் நாயர், கேப்டன் கென்க்ரூஸ், மேஜர் விவேக் குப்தா, மேஜர் ராஜேஷ் அதிகாரி, மேஜர் ஆச்சாரியா,லெப்டினெட் பாண்டே, லெப்டினெட் நோக்ராம் ஆகியவை இவர் வைத்துள்ள பெயர்கள். சுதந்திரதினத்துக்கு சிலநாட்களுக்கு முன்பு இங்குள்ள கட்டிடங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டது.
டேராடூனில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரியில் படித்த பிரிகேடியர் பிஜாவத் இதுகுறித்துக் கூறுகையில்,நாட்டுக்காக உயிரைத் துச்சமாக நினைத்துப் போராடி உயிரை விட்ட தியாகிகளின் நினைவாக, அவர்களதுபெயர்களை எனக்குச் சொந்தமான பல கட்டிடங்களுக்கு வைத்துள்ளேன். இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக்கொடுக்கிறது. இது எனது முதல் முயற்சிதான் என்றார் பிஜாவத்.
கேட்கவே பெருமையாக இருக்கிறதல்லவா?
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications