குழப்பத்தில் மன்னார் முஸ்லீம் அகதிகள்
கல்பிடியா (இலங்கை):
இலங்கையின் வட மேற்கு மாகாணத்திலுள்ள முகாம்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கானமுஸ்லீம் அகதிகள் தங்களது கிராமங்களில் உள்ள நிலங்கள் மீண்டும் தங்களுக்குக்கிடைக்குமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
1990-ம் ஆண்டு இவர்கள் அனைவரும் சொந்த ஊரான மன்னாரிலிருந்துவெளியேறியவர்கள். காரணம் விடுதலைப் புலிகள். மரணத்தைச் சந்தியங்கள் அல்லதுவெளியேறுங்கள் என்று புலிகள் பிறப்பித்த கட்டளைக்குப் பயந்து மூட்டை, முடிச்சுகளுடன்குடும்பத்துடன் வெளியேறி அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்கள்.
மன்னாரில் தமிழர்களும், முஸ்லீம்களும் அதிகம் வசிக்கின்றனர். இலங்கையில்இரண்டாவது பெரிய இனமான தமிழர்கள்தான் மன்னாரில் பெரும்பான்மையாக உள்ளனர்.அவர்களுக்கு அடுத்த இடத்தில் முஸ்லீம்களும், ஓரளவு சிங்களர்களும் மன்னாரில்வசிக்கின்றனர்.
இங்கிருந்து வெளியேறிய முஸ்லீம்கள் வட மேற்கு மாகாணத்தின் பல்வேறு அகதிகள்முகாம்களில் வசிக்கின்றனர். முஸ்லீம் அகதிகள் இப்போது தங்களது சொந்த ஊர் குறித்தும்அங்குள்ள தங்களது சொத்துக்கள் குறித்தும் கவலையுடன் உள்ளனர்.
இலங்கைச் சட்டத்தின்படி தொடர்ந்து 10 ஆண்டாக ஒரு நிலத்தை நிலத்தின் சொந்தக்காரர்பயன்படுத்தாமல் இருந்தால் அது அவரிடமிருந்து பறிக்கப்பட்டு அரசே எடுத்துக்கொள்ளும். அந்த சமயத்தில் யார் நிலத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களோஅவர்கள் நிலம் கோரி விண்ணப்பிக்கலாம்.
இந்தச் சட்டம்தான் முஸ்லீம் அகதிகளிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது. தங்களதுநிலங்களை யார் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ என்ற பயத்தில் அவர்கள்உள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக கொழும்பைச் சேர்ந்த மனித உரிமைக் கழகம்ஒன்று முன்வந்துள்ளது.
இலங்கை மனித உரிமைக் கமிஷனிடம் இந்தக் கழகம் ஒரு மனு கொடுத்துள்ளது. அதில்,முஸ்லீம் அகதிகளுக்கு நியாயம் வழங்குமாறு அது கோரியுள்ளது.
முஸ்லீம் அகதிகள் நாடு முழுவதும் விரவியிருந்தாலும், மன்னார் முஸ்லீம்கள்தான் அதிகஅளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக மன்னார்அகதிகள் அனைவரும் கல்பிடியா முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 10ஆண்டுகளாக எங்கும் அனுப்பப்படவில்லை.
ஆனால் பிற முகாம்களில் உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் கழித்து அவர்களதுகிராமத்திற்கும், பிற இடங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டனர். எனவே அவர்களுக்குப்பிரச்சினை இல்லை.
அகதிகளாக இருப்பது ஒருபக்கம் கவலையாக இருந்தாலும் இப்போது நிலம் குறித்த புதியகவலையும் சேர்ந்து கொண்டுள்ளதால் குழப்பத்தில் இருக்கின்றனர் மன்னார் முஸ்லீம்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications