கோவை இன்ஸ்பெக்டருக்கு ஜனாதிபதி விருது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது.
கோவை நுண்ணறிவுப் பிரிவுப் போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் நந்தகுமார். இவர் கடந்த 1976ம்ஆண்டு முதல் நுண்ணறிவுப் பிரிவுப் பணியில் சேர்ந்தார்.
சேலம், ராமநாதபுரம், சென்னை, கோவை ஆகிய இடங்களில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக இதுவரை 271முறை பரிசு வாங்கியுள்ளார்.
தற்போது இவரது சேவையைப் பாராட்டி ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை ஆளுநர் பாத்திமாபீவி, சென்னையில் நடக்க இருக்கும் விழாவில் வழங்குவார்.












Click it and Unblock the Notifications