வருகிறது தொலை மருத்துவ வசதி
சென்னை:
தமிழ்நாட்டில் தொலை மருத்துவ வசதியை அறிமுகப்படுத்துவது தொடர்பாகஎம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும், அமெரிக்காவை சேர்ந்த பாஸ்டன்சர்வதேச மருத்துவ மையத்திற்கும் இடையே ஒப்பந்தம கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், விரைவில் தொலை மருத்துவ வசதி தமிழ்நாட்டில்தொடங்கப்பட உள்ளது.
தொலைமருத்துவம் (டெலிமெடிசின்) என்பது மருத்துவத்துறையில் மகத்துவம் பெற்றுஅறிஞ்ரகளுடைய அனுபவங்களையும், அறிவரைகளையும், அவர் தம் பணிகளையும்வெகு தொலைவில் இருக்கின்ற நோயாளிகளுக்குப் பயனபட வைக்கும் ஒரு செயல்முறையாகும்.
தொலை மருத்துவத்தால், ஒரு கிராமப்புற மருத்துவமனைக்கு உலகின் மிக நவீனமருத்துவமனையின் அதி நவீன சிறப்புச் சிகிச்சை முறையை ஏற்படுத்திக் கொடுக்கஇயலும்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மக்கள்நல்வாழ்வுத்துறை டாக்டர் ஆனந்தக் கண்ணன், அமெரிகாவில் பாஸ்டன் நகரில் உள்ளபன்னாட்டு மருத்துவம் மற்றும் ஆலோசகர் பார்த்திபன் சண்முகம் ஆகியோர் புதன்கிழமை சென்னனையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
தமிழ்நாட்டில் தொலை மருத்தபவ வசதி செய்வது குறித்து விவாதித்தனர். இதன்தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை கழகத்தில் தொலை மருத்துவமையம் 8.9.2000 அன்று முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இத்தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications