"தேயிலை தரம் இல்லாவிட்டால் கடையை மூட வேண்டியதுதான்
கோவை:
நீலகிரி தேயிலையின் தரத்தை மேம்படுத்தாவிட்டால், அடுத்த ஓராண்டிற்குள் பல சிறு தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விடும் என தென்னிந்தியதோட்டத் தொழிலதிபர்கள் சங்கமான உபாசி யின் இணை இயக்குநர் விக்ரம் கபூர் தெரிவித்தார்.
உபாசி சார்பாக குன்னூரில் நடந்த கருத்தரங்கில் விக்ரம் கபூர் பேசியதாவது:
நீலகிரியில் பல தொழிற்சாலைகளில் தரமற்ற தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கலப்படம் அதிகரிக்கிறது. இதனை தவிர்த்துதேயிலையின் தரத்தை மேம்படுத்தாவிட்டால், அடுத்த சில மாதங்களில், பல சிறு தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விடும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், தேயிலையின் தரம் சர்வதேச தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எனவே தரத்தை உயர்த்த தவறினால், பலசிறு தேயிலைத் தொழிற்சாலைகள் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.
இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், தேயிலைத் தர மேம்பாட்டிற்காக மத்திய அரசும், பல கூட்டுறவு நிறுவனங்களும் நிதியுதவி அளிப்பது குறித்துபரிசீலனை செய்து வருகின்றன.
தெழிற்சாலை அதிபர்கள் தர மேம்பாட்டிற்காக விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்றார் விக்ரம் கபூர்.












Click it and Unblock the Notifications