இதுதான் கடைசி ஒலிம்பிக் ...கூறுகிறார் முகேஷ் குமார்
டெல்லி:
சிட்னி ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சில போட்டிகளில் மட்டுமேகலந்து கொள்ளப் போவதாக இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர் முகேஷ்குமார் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த முகேஷ் குமார், ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு குடும்பம்மற்றும் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், அடுத்து வரும் ஆண்டுகளில் என்னசெய்வது என்பதைத் திட்டமிட்டு விட்டேன். எனது குடும்பத்திற்காக கூடுதல் நேரத்தைஒதுக்க முடிவு செய்துள்ளேன்.
இதுவே நான் கலந்து கொள்ளும் கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கும். அதன்பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சில சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன்.எனது வேலையிலும் கூடுதல் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளேன் என்றார் முகேஷ்குமார்.
முகேஷ் கலந்து கொள்ளும் மூன்றாவது ஒலிம்பிக் போட்டியாகும் இது. 36 வயதாகும்முகேஷ் குமார், சிட்னி ஒலிம்பிக் குறித்துக் கூறுகையில், எனது சிறந்த அனுபவத்தின்மூலம் இந்திய அணிக்குப் பதக்கம் பெற்றுத் தர உதவுவேன். 100 சதவீதவிளையாட்டை இந்த ஒலிம்பிக்கில் வெளிப்படுத்துவேன்.
பெங்களூரில் ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி முகாம் நடப்பது பொருத்தமானதேஎன்றார் அவர்.
முன்னாள் ஹாக்கி வீராங்கனை நிதி குல்லாரை மணந்துள்ள முகேஷ் குமாருக்கு ஒருமகள் உள்ளார். முகேஷ், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கஆர்வமாக உள்ளார் முகேஷ் குமார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர்களுக்குபயிற்சி அளிக்க ஆர்வமாக உள்ளேன். ஆந்திராவில் ஹாக்கி குறித்த விழிப்புணர்வுஅதிகரிக்க வேண்டும்.
திருப்பதியில் எனது பயிற்சி அகாதெமியை அமைக்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்குஉதவ திருப்பதி வெங்கடாஜலபதி தேவஸ்தானம் முன்வந்துள்ளது. ஹைதராபாத்திலும்ஒரு அகாதெமி அமைக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார் முகேஷ் குமார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications