கோபாலை அவன், இவன் என்பதா?...ஜெவுக்குக் கண்டனம்
சென்னை:
நக்கீரன் கோபாலை தரம் தாழ்த்தி அவன் , இவன் என்று விமர்சித்ததற்கு , சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தலைவர் எல்.ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுத் தள்ள வேண்டும் என்று முன்னாள்முதல்வர் ஜெயலலிதா இந்த நேரத்தில் விடுத்துள்ள அறிக்கை அவர் வகித்த பதவிக்கு உகந்ததல்ல.
அவரது அறிக்கை எத்தகைய மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதும் அவர் அறியாததுமல்ல. இருந்தும் அரசியல் ஆதாயத்துக்காக மீண்டும்ஆட்சி கட்டிலில் எப்படியாவது அமர்ந்து விட வேண்டும் என்பதற்காக சகட்டுமேனிக்கு அனைத்து தரப்பினரையும் சாடியிருக்கிறார்.
குறிப்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால் பற்றி அவன், இவன் என்று ஏக வசனத்தில் அறிக்கை விடுத்திருப்பது பொறுப்பற்ற செயல் என்றும்தரம்தாழ்த்தி பத்திரிகையாளர்களை விமர்சிப்பதையும் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஐந்து ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்த பொழுது சந்தன கடத்தல் வீரப்பனை ஏன் இவரால் சுட்டுத்தள்ள முடியவில்லை என்பது நமது தாழ்மையானகேள்வி.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு கர்நாடக தமிழக மக்கள் கவலையோடு, அதே நேரத்தில் கொந்தளிப்போடு இருக்கும் இந்த சூழ்நிலையில் இரு மாநிலஅரசுகளின் வேண்டுகோளை ஏற்று தனது உயிரை பணயம் வைத்து மனிதாபிமான செயலில் ஈடுபட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபால் போன்றவர்களைபாராட்டாவிட்டாலும் கடுமையாக விமர்சிப்பதை கைவிட வேண்டும் என்று ஜெயலலிதாவை கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications