கோமாவில் மத்திய அமைச்சர் குமாரமங்கலம்
டெல்லி:
மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் (48) கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ரங்கராஜன் டெல்லியிலுள்ள அகில இந்திய விஞ்ஞான மருத்துக்கழக மருத்துமனையில் இரண்டுவாரத்திற்கு முன்பு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை அவர்கோமா நிலைக்குச் சென்றார்.
மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆர்.கே.சர்மா இதுகுறித்துக் கூறுகையில், குமாரமங்கலத்திற்கு ரத்த அழுத்தம் நிலையாக இல்லை. 10 க்கும்மேற்பட்ட டாக்டர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் இன்னும் கோமா நிலையிலேயே இருக்கிறார் என்றார்.
குமாரமங்கலத்திற்கு எக்ஸ்ரே, ஸ்கேனிங் மற்றும் பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை வரை அவர் உடல்நலத்தில் எந்தப்பாதிப்பும் இல்லை.
மத்திய சுகாதார அமைச்சர் சி.பி.தாகூர், மருத்துவமனைக்குச் சென்று ரங்கராஜன் குமாரமங்கலத்திற்குக் கொடுக்கப்படும் சிகிச்சை குறித்துமருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பிரதமர் வாஜ்பாய் தனது எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு டெல்லியில் ரங்கராஜன் சிகிச்சை பெற்று வரும்மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தார்.
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், மத்திய அமைச்சர்கள் அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ரங்கராஜன் குமாரமங்கலம்சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று ரங்கராஜன் குமாரமங்கலத்தின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications