தமிழ் தீவிரவாதிகளை விடுவிப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன் நிபந்தனையை ஏற்று 5 தமிழ்த் தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கூடாதுஎன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு வருமாறு:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த ஜுலை மாதம் 30-ம் தேதி வீரப்பனால் கடத்திசெல்லப்பட்டார்.

ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேரை விடுவிப்பதற்காக சில நிபந்தனைகளைகோரிக்கை என்ற பெயரில் வீரப்பன் விதித்துள்ளான். இதன்படி இந்திய. தண்டனைச்சட்டம் 365, 368. 149, 387 ஆகிய பிரிவுகளின் கீழ் வீரப்பன் குற்றம் புரிந்துள்ளான்.

தமிழக சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 5 தீவிரவாதிகள் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு கடந்த 14-ம் தேதி அறிவித்தது.

ராஜ்குமாரை பாதுகாப்பாக மீட்க வேண்டியது தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின்கடமை என்பதை மறுக்க முடியாது. எனினும் தமிழக காவல்துறை எடுக்கும் சட்டபூர்வநடவடிக்கைகளில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை.

எனவே, வீரப்பன் விடுக்கும் சட்ட விரோத கோரிக்கைகளை ஏற்பதற்கு தமிழகஅரசுக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.

5 தமிழ் தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்.வீரப்பனின் சட்ட விரோத கோரிக்கைகளை ஏற்றால் அரசியல் சாசனம் மீது மக்கள்நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மனு வியாழக்கிழமைவிசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+