ஷில்லாங்கில் திவிரவாதிகள் தாக்குதலில் ஹவில்தார் சாவு
ஷில்லாங் (மேகாலயா):
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேநடந்த கடும் சண்டை யை அடுத்து அங்கு 24 மணிநேர ஊரடங்குஅமல்படுத்தப்பட்டது.
ஷில்லாங்கில் செவ்வாய்க்கிழமை இரவு ஹைனென்டிரப் தேசிய விடுதலைக்குழு(எச்.என்.எல்.சி) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் போலீசாருக்கும்இடையே கடும் சன்டை ஏற்பட்டது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தஹவில்தார் ஒருவர் கொல்லப்பட்டார். ஒரு கான்ஸ்டபிள் காயமடைந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு புதன்கிழமை காலை 5 மணிமுதல் 24 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேகாலயா போலீஸ் டி.ஜி.பி டெய் சைவான் கூறுகையில், இந்த சம்பவத்தில் வேறுஎந்த தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை. எச்.என்.எல்.சி. தீவிரவாதிகள்தான்மோதலில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை இரவு மோதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடும் வேட்டையில்போலீசார் ஈடுபட்டனர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications