கருணாநிதியுடன் ராஜ்குமார் மகன்கள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் புதன் கிழமை காலை தமிழக முதல்வர் கருணாநிதியை நடிகர் ராஜ்குமார்மகன்கள் சந்தித்துப் பேசினர்.

சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பன் பிடியில் சிக்கியிருக்கும் கன்னட நடிகர்ராஜ்குமாரை மீட்கும் முயற்சியின் அடுத்த கட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது.வீரப்பன் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிய 5 தீவிரவாதிகள் வியாழக்கிழமைவிடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

அவர்களை ஜாமீனில் விடுவித்ததற்கான நீதிமன்ற ஆணை, தேசிய பாதுகாப்புச்சட்டத்தை விலக்கி அரசு வெளியிட்ட உத்தரவு ஆகியவற்றின் நகல்களுடன் அரசு தூதர்கோபால் புதன் இரவு அல்லது வியாழன் காலை மீண்டும் காட்டுக்குச் செல்வார் எனத்தெரிகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில்நடிகர் ராஜ்குமாரின் இரு மகன்களும் சந்தித்தனர். இந்த சந்திப்பு அரை மணி நேரம்நடந்தது. ராஜ்குமாரை மீட்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவரதுமகன்களிடம் முதல்வர் விளக்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+