மதுரையிலிருந்து கோட்டைக்கு .... தற்கொலைக்காக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கோட்டை முன்பு தற்கொலை செய்ய முயன்றதாக சுதந்திரப் போராட்ட தியாகி கைது செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்தவர் படிகாசலம். இவர் சுதந்திரப் போராட்ட தியாகி. இந்திய ஏழை மக்கள் முன்னணி என்றஅமைப்பை நடத்தி வரும் இவர், தவறு செய்யும் அரசியல்வாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டை முன்பு தற்கொலைசெய்யப்போவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, கதர் சட்டையும், தலையில் குல்லாவும் அணிந்து கொண்டு போர் நினைவுச் சின்னம் பகுதியிலிருந்துகோட்டை நோக்கிப் புறப்பட்டார். அவர் புறப்படுவதை அறிந்த போலீஸார் வழியிலேயே அவரை மடக்கிப் பிடித்துகைது செய்தனர்.












Click it and Unblock the Notifications