ஜவுளி மேம்பாட்டு நிதியை முறையாகப் பயன்படுத்த கமிட்டி
கோவை:
ஜவுளி மேம்பாட்டு நிதியை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள திருப்பூர் தொழிலதிபர்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் தென்னிந்திய ஆயத்த ஆடை துணி உற்பத்தியார்கள் சங்கத்தின் தலைவர் மோகன் கந்தசாமி, ஆயத்தஆடை ஏற்றுமதிக் கழகத்தின் இணை இயக்குநர் வசந்தகுமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 1981ம் ஆண்டு முதல் இந்தியா, ஆயத்த ஏற்றுமதியில் வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டுகளில்இந்த ஏற்றுமதி 3.7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், இனி வரும் ஆண்டுகளில் கடும் போட்டியைச்சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எனவே, சர்வதேசத் தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யும் வகையில், இயந்திரங்களை மேம்படுத்திக்கொள்ள மத்திய அமைச்சகம், ஜவுளி மேம்பாட்டு நிதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிதியை முறையாகப் பெற்று, பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள நமது தொழிதிபர்களிடம்இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தரமுள்ள ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்ய திருப்பூரில் ஒரு கமிட்டிஅமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி தொழிலதிபர்களுக்குத் தேவையான வழிமுறைகளை அளிக்கும்.
திருப்பூரில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இருந்த போதிலும் 56 பேர் மட்டுமே 50 கோடி ரூபாய் அளவிற்குதொழில்நுட்பத்தை மேம்படுத்த நிதியுதவி பெற்றுள்ளனர்.
கடந்த 1994ம் ஆண்டு முதல் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சீனா முன்னேற்றமடைந்துள்ளது. இதற்கு அந்த நாடுதொழில்நுட்ப முன்னேற்றத்தில் வெற்றி கண்டுள்ளது தான் காரணம். அவ்வப்போது தொழில்நுட்ப மேம்பாடும்செய்யப்பட்டு வருகிறது.
தொழிலாளர்களின் திறனை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவும் புதியபயிற்சி மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications