வீரப்பன் கோரிக்கைக்குப் பணிந்தது தமிழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனின் கோரிக்கையை நிறைவேற்றுவதன் முதல் படியாக, நான்கு தமிழ்த்தீவிரவாதிகள் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த புகார்களைதமிழக அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

மற்றொரு தீவிரவாதி மீதான வழக்கையும் விலக்கிக் கொள்வது தொடர்பானநடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.

நடிகர் ராஜ்குமார் மற்றும் பிறை பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால், ஐந்துதமிழ்த் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளைவீரப்பன் கும்பல் கூறியிருந்தது.

இந்த நிலையில் இவர்கள் ஐந்து பேரையும் விடுவிப்பது தொடர்பான சட்டப்பூர்வநடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது.

முதல் கட்டமாக தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த பொன்னிவளவன்,தமிழ்நாடு மீட்புப் படையின் சத்தியமூர்த்தி, மணிகண்டன், முத்துக்குமார் ஆகியோர்மீது சுமத்தப்பட்டிருந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான புகார்கள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து நான்கு பேரும் ஜாமீன் கேட்டு விசாரணைநீதிமன்றங்களில் மனுச் செய்யலாம்.

சத்தியமூர்த்தி, மணிகண்டன், முத்துக்குமார் ஆகிய மூவரும் திங்கள்கிழமை திருச்சிசிறையிலிருந்து ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.அங்கிருந்து காட்டுக்கு அழைத்துச் செல்லும் வகையில் அவர்கள் இடமாற்றம்செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஐந்தாவது நபரான வெங்கடேசன் என்பவர் தடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரையும் விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

ஐந்து தீவிரவாதிகளையும் கொடுத்து விட்டு ராஜ்குமாரையும், பிறரையும் அழைத்துவருவது என திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா, எல்லாம் திட்டமிட்டபடி நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தடா கைதிகளை விடுவிப்பதை எதிர்த்துநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டிருப்பது குறித்து அவர் கூறுகையில், 51 பேர் மீதானதடா வழக்கை வாபஸ் பெறுவது சிரமமான காரியமாக இருக்காது என்றார் கிருஷ்ணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+